உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிரோன் உதவியுடன் யானையை பிடிக்க முயற்சி

டிரோன் உதவியுடன் யானையை பிடிக்க முயற்சி

தொண்டாமுத்துார்; போளுவாம்பட்டி மற்றும் கோவை வன சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் 'ரோலெக்ஸ்' என பெயரிடப்பட்ட காட்டு யானை, விவசாய நிலங்கள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதால், அதை பிடித்து, வேறிடத்தில் விட வேண்டுமென விவசாயிகள் கோரினர். அதையேற்று, டாப்சிலிப் முகாமில் இருந்து மூன்று கும்கிகள் வரவழைக்கப்பட்டன. 'ரோலெக்ஸ்' வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் உள்ளது. வனப்பகுதியை ஒட்டிய சமதள பகுதிக்கு, 'ரோலெக்ஸ்' வந்ததும் பிடிக்க, வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சமதளமாக இருந்தால், மயக்க மருந்து செலுத்தியதும், கும்கிகளை வைத்து, அதனை பிடிக்கவும், வாகனத்தில் ஏற்றவும், வசதியாக இருக்கும். ஒன்பது நாட்களாக, 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், இரவு, பகலாக 'ரோலெக்ஸ்' யானையை கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர்கள், இப்போது டிரோன் பயன்படுத்தி யானையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை