மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : எரிசக்தி சேமிப்பு தினம்
14-Dec-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், இன்ஸ்டிடியூட் ஆப் இன்னவேஷன் கவுன்சில், நேச்சுரல் கிளப் மற்றும் உன்னத் பாரத் அபியான் சார்பில், தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.இதில், தேசிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அதன் சிக்கனம் குறித்து, வீடியோ காட்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தாத்துார் கிராமத்துக்கு சென்ற மாணவர்கள், எரிசக்தி பாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா தலைமையில் பேராசிரியர்கள் கவிதா, குந்தவி நப்பின்னை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
14-Dec-2024