உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

பொள்ளாச்சி; ஆனைமலை அருகே, சேத்துமடை அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு, தேச தலைவர்கள் உருவப்படங்கள் திறப்பு, திருவள்ளுவர் சிலை திறப்பு, நுாலக புத்தகங்கள் வழங்குதல், போக்சோ புத்தக பை வழங்கல் என, ஐம்பெரும் விழா நடந்தது. விழாவில், உயர்நிலைப்பள்ளி மாணவியருக்கு பாலியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவியரிடம், 'போக்சோ' சட்டம் குறித்து விளக்கப்பட்டது.மாணவர்களுக்கு வழங்கிய புத்தக பையில், 'போக்சோ ெஹல்ப் லைன்' எண் குறிப்பிடப்பட்டிருந்தது. ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் மாசிலாமணி கூறியதாவது: மாணவியர் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பாலியல் தொல்லைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், பாலியல் தொல்லைகள் ஏற்பட்டால் உடனடியாக, சைல்டு ெஹல்ப் லைன், '1098'க்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். இது குறித்து மாணவியரிடம் விளக்கும் வகையில், புதியதாக வழங்கப்பட்ட புத்தகப்பைகளில், 'ெஹல்ப் லைன்' குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி