மேலும் செய்திகள்
ஐப்பசி முதல் நாளில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
19-Oct-2024
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாதம் செவ்வாய்க்கிழமையான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின் காலை, 7:00 மணிக்கு சிறப்பு பாலாபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, சத்ரு, சம்ஹார த்ரிசதி, வேல் மாறல் பாராயணம் நடைபெற்றது.தொடர்ந்து நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமை பூஜை சிறப்பாக நடந்தது.
19-Oct-2024