உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்தி ஜெயந்தியன்று இறைச்சி விற்க தடை

காந்தி ஜெயந்தியன்று இறைச்சி விற்க தடை

கோவை; காந்தி ஜெயந்தியை யொட்டி ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே, நாளை (அக். 2) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடுமாறு தெரிவிக் கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் உக்கடம், சத்தி ரோடு மற்றும் போத்தனுார் ஆடு, மாடு அறுவைமனைகள் செயல்படாது. மீறி செயல்படும் கடைகள் மீது அபராதம், இறைச்சி பறிமுதல், கடை உரிமம் ரத்து நடவடிக்கை பாயும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ