உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீச் வாலிபால் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி

பீச் வாலிபால் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி

கோவை; எஸ்.எஸ்.குளம் குறுமைய அளவில், பள்ளிகளுக்கு இடையேயான 'பீச்' வாலிபால் போட்டி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்.பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான போட்டியில், 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், போட்டியை துவக்கி வைத்தார். இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணி முதலிடம், டி.கே.எஸ். மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. தவிர, 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணி முதலிடம், வெள்ளக்கிணறு வி.சி.வி. பள்ளி இரண்டாமிடம் வென்றன. 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் டி.கே.எஸ். பள்ளி முதலிடம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அணி இரண்டாமிடம் வென்றன. 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் டி.கே.எஸ். பள்ளி முதலிடம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி முதலிடம், வி.சி.வி. பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணி முதலிடம், செயின்ட் ஆன்டனி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை