உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பைமேட்டில் தீ பா.ஜ., நிர்வாகி தர்ணா

குப்பைமேட்டில் தீ பா.ஜ., நிர்வாகி தர்ணா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ விபத்தை கண்டித்து, பா.ஜ., நிர்வாகி தர்ணாவில் ஈடுபட்டனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு டாஸ்மாக் கடை எதிரே, குப்பை கொட்டப்படுகின்றன. சமூக விரோதிகள், குப்பைக்கு அடிக்கடி தீ வைப்பதால், சாமி செட்டிபாளையம், ஜோதிபுரம், வீரபாண்டி பிரிவு உட்பட பகுதிகளில் இரவு நேரங்களில் புகை மூட்டம் ஏற்படுகிறது; அப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு குப்பை மேட்டில் சிலர் வைத்த தீயால், தீ மற்றும் புகைமூட்டம் ஏற்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பா.ஜ., கட்சியின் பிரசார பிரிவு மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் நேற்று, அப்பகுதியில் கூடலுார் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திடக்கழிவு மேலாண்மை மையத்தை உடனடியாக நிறுவ கோரியும், தர்ணாவில் ஈடுபட்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்ததால், தர்ணா கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி