மேலும் செய்திகள்
கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
12-May-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு நகர பா.ஜ., சார்பில் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டி, தேச ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக முடித்த இந்திய இராணுவ வீரர்களை பாராட்டும் வகையில், கிணத்துக்கடவு நகர பா.ஜ., சார்பில் பேரணி நடந்தது.கிணத்துக்கடவு பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிகுமார் மற்றும் நகர தலைவர் செல்வேந்திரன் தலைமையில் பேரணி துவங்கியது.இதில், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் முதல் பொன்மலை கோவில் அடிவார பஸ் ஸ்டாப் வரை பா.ஜ.,வினர், 73 மீட்டர் தேசிய கொடியை கையில் ஏந்திய படி, பேரணியாக சென்றனர். இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டியும், தேச ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
12-May-2025