உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரேஷன் கடைகளில் பிரதமர் போட்டோ உண்ணாவிரதமிருந்த பா.ஜ.,வினர் கைது

 ரேஷன் கடைகளில் பிரதமர் போட்டோ உண்ணாவிரதமிருந்த பா.ஜ.,வினர் கைது

கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பிரதமர் மோடி போட்டோ வைக்க வலியுறுத்தி, கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர், 49 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின், 'அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு மாதந்தோ றும் 2 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த தகவல் பலகையும், பிரதமர் மோடியின் புகைப்படமும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இடம்பெற வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தி வந்தது. மேலும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டையை மருத்துவமனைகள் ஏற்க மறு க்கின்றன. இத்திட்டத்தை மாநில அரசு திட்டமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் என, மாற்றி அழைக்கின்றனர். மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் திட்டங்களில், பிரதமரின் பெயர் தெரியக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு திட்டமிட்டு இப்படி செய்து வருவதாக கூறி, அதை கண்டித்து, கோவை சிவானந்தா காலனியில், நேற்று உண்ணாவிரதம் மேற்கொள்ள, கோவை மாநகர போலீசாரிடம், கோவை மாநகர பா.ஜ., அனுமதி கோரியிருந்தது. போலீசாரின் வாய்மொழி உத்தரவையடுத்து நேற்று உண்ணாவிரதம் துவங்கியது. துவங்கிய சில நிமிடங்களிலேயே, போலீசார் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதியில்லை எனக்கூறி, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட, 49 பேரை கைது செய்தனர். இதனால் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்று ம் பா.ஜ.,வினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரமேஷ்குமார் கூறுகையில், ''வாய்மொழியாக அனுமதி கொடுத்துவிட்டு, பந்தல் அமைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உண்ணாவிரதம் துவங்கிய பின் அனுமதியில்லை என்று சொல்லி அனைவரையும் கைது செய்வது நியாயமா? இது அரசியல் பழிவாங்குதல் தானே ' ' என்றார். இதற்கிடையே, 'பா.ஜ .,வின ரின் போராட்ட முகம், முதல்வர் ஸ்டாலினையும், அவரது கட்டுப்பாட்டில் கைகட்டி நிற்கும் காவல் துறையையும் பயமுறுத்துகிறதா' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ