உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘இடைத்தரகர்கள் மூலமாக வந்தால் கட்டட அனுமதி’

‘இடைத்தரகர்கள் மூலமாக வந்தால் கட்டட அனுமதி’

கோவை: மாநகராட்சியில் கட்டட வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பித்தால், சர்வர் பிரச்னை என கூறி, கிடப்பில் போடப்படுகின்றன. 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 3 மாதங்களாக இப்பிரச்னை நீடித்து வருகிறது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ‘சர்வர் பிரச்னை; என்ன செய்வதென்றே தெரியவில்லை. சென்னையில் தான் சரி செய்ய வேண்டும்’ என சொல்லும் நகரமைப்பு அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், இடைத்தரகர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுப்பதாக, ம.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் சித்ரா கூறுகிறார். மாநகராட்சி கமிஷனருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இடைத்தரகர்கள் சென்று கூறினால், சென்னைக்கு உடனடியாக பேசி, அனுமதி பெற்றுத்தருகிறார்கள். மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. வரைபட அனுமதி வழங்குவதில் உள்ள தொய்வுக்கு தீர்வு காண வேண்டும்’ என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ