உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதிர்வு தொகைக்கான பத்திரத்தை பெற அழைப்பு

முதிர்வு தொகைக்கான பத்திரத்தை பெற அழைப்பு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சமூக நலத்துறை அலுவலகத்தில் இரு பெண் குழந்தைகள் திட்டத்தில் முதிர்வு அடைந்த பத்திரங்களை பயனாளிகள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெண்கள் முன்னேற்றத்திற்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், கிணத்துக்கடவு சமூக நலத்துறை அலுவலகத்தில், இரு பெண் குழந்தைகள் திட்டத்தில், 245 நபர்கள் சேர்ந்திருந்தனர். இதில், 175 நபர்கள் இத்திட்டத்திற்கான பத்திர நகலை அலுவலகத்தில் கொடுத்து முதிர்வு தொகைக்கான, அசல் பத்திரத்தை பெற்று சென்றனர்.ஆனால், மீதமுள்ள 70 நபர்கள் பத்திரம் முதிர்வடைந்தும் இன்னும் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர்.இதை பெற பிறப்புச் சான்று, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 2, உள்ளிட்டவைகளை சமூக நலத்துறை அலுவலகத்தில் வழங்கி, முதிர்வு தொகைக்கான பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை கிணத்துக்கடவு சமூக நலத்துறை அலுவலர் ஷோபனா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ