சோதனை சாவடி ரெய்டு: நான்கு பேர் மீது வழக்கு
மதுக்கரை: திருமலையாம்பாளையம் பிரிவு, எட்டிமடை அருகே ஆர்.டி.ஓ., சோதனை சாவடிகள் உள்ளன. இவற்றை கடந்து செல்லும் வாகன டிரைவர்களிடம், 20 முதல் நூறு ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜூலை 13 அன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்தனர். கணக்கில் வராத, ரூ.1.18 லட்சம் சிக்கியது. மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், உதவியாளர்கள் கல்பனா, பத்மா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதுபோல், கோவை நோக்கி வரும் வாகன சோதனை சாவடியில் ஏழாயிரம் ரூபாய் சிக்கியது. மோட்டார் வாகன ஆய்வாளர் காசிலிங்கத்திடம் விசாரணை நடத்தினர். ஆறு மணி நேரம் நடந்த சோதனை முடிவில் ரூ.1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.