மேலும் செய்திகள்
நகைக்கடை முன் போராட்டம்
30-Sep-2025
கோவை; கோவை பெரிய கடை வீதியில், பீர்முகமது, 40 என்பவரது நகைக்கடையில், தெற்கு உக்கடம் ஜி.எம்., நகரைச் சேர்ந்தவர் ஜாஹிர், 35 சில மாதங்களுக்கு முன் பணிபுரிந்தார். தொழில் நஷ்டத்தால் பீர் முகமது நகைக்கடையை மூடினார். அதே பகுதியில் உள்ள வேறொரு நகைக்கடையில் ஜாஹிர் பணியில் சேர்ந்தார். கடைக்கு வெளியே சென்று நகை செய்யும் ஆர்டர்களை பெற்று தந்தார். இது குறித்து பீர்முகமதுவுக்கும், ஜாஹிருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், பணிபுரியும் கடைக்கு அருகே ஜாஹிர் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த பீர்முகமது நண்பர் சிக்கந்தர் பாஷா, 40, 'ஏன் பீர் முகமதுவுக்கு தங்க நகை ஆர்டர்கள் பெற்று தருவதில்லை' எனக் கேட்டு தாக்கியுள்ளார். பீர்முகமதுவும் அவரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். பெரிய கடை வீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
30-Sep-2025