உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம் ஏற்பாடுகள் சொதப்பல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம் ஏற்பாடுகள் சொதப்பல்

கோவை: மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது. மக்கள் சுய கணக்கெடுப்பை பதிவு செய்வதற்காக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முறையான ஏற்பாடுகள் செய்யாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிலர் கூறுகையில், 'மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 2 நாட்களும் தலா 20 இடங்களில் முகாம் நடந்தது. 11வது வார்டு முல்லை நகரில் முகாம் நடக்குமென அறிவிக்கப்பட்டது. அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டதற்கு எதுவும் தெரியாது என்றனர். பிறகு பி.என்.புதூரில் அவசர அவசரமாக பந்தல் அமைத்து, முகாம் நடப்பதாக அழைத்தனர். இப்படி பெரும்பாலான பகுதிகளில் அறிவித்தபடி ஏற்பாடு செய்யவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ