உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பை போட்டி; வசதியின்றி தவிப்பு: அரசு தோள் கொடுத்தால் வீரர்களின் திறமை மேலோங்கும்

முதல்வர் கோப்பை போட்டி; வசதியின்றி தவிப்பு: அரசு தோள் கொடுத்தால் வீரர்களின் திறமை மேலோங்கும்

கோவை; கோவையில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு, தொலைதுாரங்களில் இருந்து செல்லும் வீரர், வீராங்கனைகள் பஸ் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வசதிகளின்றி பரிதவிக்கின்றனர். இப்போட்டிக்கு கோவை மாவட்டத்தில், இந்தாண்டு 53 ஆயிரத்து 576 பேர் பதிவு செய்தனர். ஆக., 26ல் விளையாட்டு போட்டிகள் துவங்கின; வரும் 12 வரை நடக்கின்றன. 67 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உணவு, போக்குவரத்து வசதி இல்லாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள் பரிதவிப்பதாக புலம்பல்கள் எழுகின்றன. முதல்வர் கோப்பை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு தனியே ஒரு கல்லுாரியிலும், மாணவர்களுக்கு ஒரு கல்லுாரியிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இக்கல்லுாரிகளில் மூன்று, நான்கு மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்தாண்டு கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளுக்கு நேரம், 'ஓவர்' குறைக்கப்பட்டது. இந்தாண்டு அனைத்து போட்டிகளும் விதிமுறைகளின்படி நடத்தப்படுகிறது. போட்டி முடியும் வரை, அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் தொலைவில் உள்ள கல்லுாரி மைதானங்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும். உணவு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். குறுமைய போட்டிகள் முடிந்ததும் முதல்வர் கோப்பை போட்டிகள் துவங்கியதால், மாணவர்களுக்கு பஸ் போக்குவரத்து, உணவுக்கு மீண்டும் போதிய நிதி ஒதுக்க முடிவதில்லை. இதனால் தங்கள் சொந்த செலவில் பயணம், உணவுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. செலவு செய்ய முடியாதவர்கள் போட்டிகளில் பங்கேற்க தயங்குகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அன்றே சுட்டிக்காட்டியது தினமலர்

கடந்தாண்டு நடந்த முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில், வீரர், வீராங்கனைகளுக்கான வசதி குறைபாடுகள் குறித்து, 2024 செப்., 16ல் 'முதல்வரே கவனியுங்க!' என்ற தலைப்பில் நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதேபோல், 'கொஞ்சம் ஓவர்!' என்ற தலைப்பில், அவசரகதியில் போட்டிகள் நடத்தப்பட்டது குறித்தும் செப்., 18ல் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி