முதல்வர் கோப்பை மாநில கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடும் இரு பாலர் அணிகள்
கோவை; மாநில அளவிலான 'முதல் வர் கோப்பை' கூடைப்பந்து போட்டி நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி கூ டைப்பந்து மைதானத்தில் நடந்துவருகிறது.பள்ளி மாணவர்களை அடுத்து, கல்லுாரி மாணவர்களுக்கு கடந்த, 7ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில், திருநெல்வேலி அணி, 74-37 என்ற புள்ளிகளில் அரியலுார் அணியை வென்றது. தொடர்ந்து, திருப்பூர் அணி, 52-38 என்ற புள்ளிகளில் மயிலாடுதுறை அணியையும், மதுரை அணி, 75-72 என்ற புள்ளிகளில் காஞ்சிபுரம் அணியையும் வென்றன. கிருஷ்ணகிரி அணி, 79-40 என்ற புள்ளிகளில் திருவண்ணாமலை அணியையும், வேலுார் அணி, 80-45 என்ற புள்ளிகளில் ராமநாதபுரம் அணியையும், திருப்பத்துார் அணி, 69-22 என்ற புள்ளிகளில் ராணிப்பேட்டை அணியையும் வென்றன. கோவை அணி, 78-39 என்ற புள்ளிகளில் தேனி அணியையும், கடலுார் அணி, 68-39 என்ற புள்ளிகளில் தர்மபுரி அணியையும், நாமக்கல் அணி, 75-36 என்ற புள்ளிகளில் கரூர் அணியையும், திண்டுக்கல் அணி, 76-36 என்ற புள்ளிகளில் ஈரோடு அணியையும் வென்றன. மாணவியருக்கான போட்டியில், திருநெல்வேலி அணி, 77-19 என்ற புள்ளிகளில் ராமநாதபுரம் அணியையும், சிவகங்கை அணி, 27-19 என்ற புள்ளிகளில் கரூர் அணியையும், தென்காசி அணி, 44-33 என்ற புள்ளிகளில் திருவள்ளூர் அணியையும், ஈரோடு அணி, 65-54 என்ற புள்ளிகளில் திண்டுக்கல் அணியையும், தேனி அணி, 99-12 என்ற புள்ளிகளில் திருப்பூர் அணியையும் வென்றன. தொடர்ந்து, கிருஷ்ணகிரி அணி, 33-10 என்ற புள்ளிகளில் ராணிப்பேட்டை அணியையும், தஞ்சை அணி, 54-15 என்ற புள்ளிகளில் அரியலுார் அணியையும், பெரம்பலுார் அணி, 38-9 என்ற புள்ளிகளில் நாகப்பட்டினம் அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.