உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சி.ஐ.டி., கல்லுாரி அணியினர்

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சி.ஐ.டி., கல்லுாரி அணியினர்

கோவை; 'சி.ஐ.டி., அலுமினி டிராபி' போட்டியில், 42 புள்ளிகளுடன் சி.ஐ.டி., கல்லுாரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.சி.ஐ.டி., கல்லுாரியில் 'சி.ஐ.டி., அலுமினி டிராபி-2025' போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது. இதில், 22 கல்லுாரிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வாலிபால், கால்பந்து உட்பட, 11 வகையான போட்டிகள் இடம்பெற்றன.பல்வேறு சுற்றுகளை அடுத்து, நடந்த ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் சி.ஐ.டி., கல்லுாரி, கே.பி.ஆர்., கல்லுாரி, ஜி.சி.டி., அணிகளும், பெண்களுக்கான போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர், சி.ஐ.டி., ஜி.சி.டி., அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில், ஸ்ரீ சக்தி கல்லுாரி, பி.எஸ்.ஜி., டெக்., சி.ஐ.டி., ஆகியனவும், கிரிக்கெட் போட்டியில் கே.சி.டி., சி.ஐ.டி., எஸ்.என்.எஸ்., டெக் அணிகளும் முதல் மூன்று இடங்களை வென்றன.பெண்களுக்கான பால்பேட்மின்டன் போட்டியில் கே.பி.ஆர்., சி.ஐ.டி., எஸ்.என்.எஸ்., டெக்., அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, 42 புள்ளிகளுடன் சி.ஐ.டி., கல்லுாரியும், இரண்டாம் இடத்தை, 39 புள்ளிகளுடன் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியும், மூன்றாம் இடத்தை, 31 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி., டெக்., அணியும் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ