உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பை கால்பந்து; கே.பி.எம்., முதலிடம்

முதல்வர் கோப்பை கால்பந்து; கே.பி.எம்., முதலிடம்

கோவை: முதல்வர் கோப்பை பள்ளி மாணவர்களுக்கான கால் பந்து போட்டியில், கே.பி.எம்., மெட்ரிக் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.முதல்வர் கோப்பை பள்ளி மாணவர்களுக்கான கால் பந்து போட்டிகள் பாரதியார் பல்கலையிலும், மாணவியருக்கான போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியிலும் நடந்தன. இதில், மாணவர்கள் பிரிவில், 64 அணிகளும், மாணவியர் பிரிவில், 13 அணிகளும் பங்கேற்றன.மாணவியருக்கான இறுதி போட்டியில், விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி, 5-3 என்ற கோல் கணக்கில் மைக்கேல் ஜாப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை வென்று, முதலிடம் பிடித்தது. மாணவர்களுக்கான இறுதிப்போட்டி பரபரப்பாக இருந்தது.கே.பி.எம்., மெட்ரிக் பள்ளி அணியும், பயனீர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளி அணியும் இறுதிப்போட்டியில் விளையாடின.பரபரப்பான ஆட்டத்தின் முடிவில், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி 'டிரா' ஆனது. இதையடுத்து 'டை பிரேக்கர்' முறையில், 5-3 என்ற கோல் கணக்கில், கே.பி.எம்., பள்ளி அணி, பயனீர் மில்ஸ் அணியை வென்று முதலிடம் பிடித்தது.ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில், நேரு வித்யாலயா பள்ளி அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை