முதல்வர் கோவை வருகை; 1,200 போலீசார் அலர்ட்
கோவை; பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாளை நகருக்குள் வரும் வாகனங்களை தணிக்கை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீசார், 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.