கோர்ட் தடையை மீறி கோவில் கட்டுமான பணி என புகார்
அன்னூர்: கோர்ட் தடை உத்தரவை மீறி கோவில் கட்டுமான பணி நடப்பதாக பு கார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னத்தூரில், நட்சத்திரா கார்டனில், ரிசர்வ் சைட் பகுதியில் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கட்டுமான பணிக்கு நான்கு வார இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் பொதுமக்கள் சிலர் கோவை கலெக்டர் மற்றும் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில்,' பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதையும் மீறி தொடர்ந்து கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணி தடுத்து நிறுத்தப்படாவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்,' என தெரிவித்துள்ளனர்.