உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் பயிற்றுனர்கள் இல்லாததால் பயனில்லை

அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் பயிற்றுனர்கள் இல்லாததால் பயனில்லை

கோவை: அரசு பள்ளிகளில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) தற்போது மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கோவையில் தற்போது 206 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஹைடெக் கணினி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 76 பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒரு ஸ்மார்ட் போர்டு அமைக்க ரூ.1.9 லட்சம், ஹைடெக் ஆய்வகத்திற்காக ரூ.6.4 லட்சம் என 10 கணினிகள், புரொஜெக்டர், ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகளுடன் சேர்த்து, ஒரு பள்ளிக்கு சராசரியாக ரூ.12 லட்சம் வரை செலவழிக்கப்படுகிறது. இவ்வாறு, அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பள்ளிகளில், அவை முழுமையாக மாணவர்களால் பயன்படுத்த முடியாமல், செயலிழந்த நிலையிலேயே காணப்படுகிறது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “ஹைடெக் ஆய்வகங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க தேவையான தகுதியான பயிற்றுனர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. பல பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாகவே உள்ளன. அதனால், மாணவர்களால் அந்த ஆய்வகங்களை முறையாக பயன்படுத்த முடியாமலும், அவர்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை,” என்றனர். ஒருங்கிணைந்த கல்வித்திட்டத் துறை அதிகாரிகள் கூறுகையில், “பயிற்றுனர் பணியிடங்கள் தற்காலிகமானவை என்பதால், பெரும்பாலானோர் அந்த பதவிக்கு ஆர்வம் காட்டுவதில்லை. பயிற்றுனர்களை நியமிக்கும் பொறுப்பு, கெல்ட்ரான் எனும் தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்திருப்பதால், அதில் நேரடியாக தலையிட முடியாது. இருப்பினும், பள்ளிகளில் அமைக்கப்படும் ஆய்வகங்களை பற்றிய கண்காணிப்பு பணிகளை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி