மேலும் செய்திகள்
3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
10-Oct-2024
வால்பாறை: சந்தையில் விற்பனைக்காக கொண்டு வந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.வால்பாறையில் சந்தைநாளான நேற்று, வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் காய்கறி, துணி, தேங்காய் உள்ளிட்ட வியாபாரம் செய்தனர்.வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன்பு அங்கலக்குறிச்சியை சேர்ந்த தாமோதரன் என்பவர் வால்பாறையில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக, 90 கிலோ ரேஷன் அரிசியை விற்பனைக்காக வைத்திருந்தார்.தகவல் அறிந்த போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
10-Oct-2024