உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்வில் சாதித்த கீதாஞ்சலி மாணவர்களுக்கு பாராட்டு

தேர்வில் சாதித்த கீதாஞ்சலி மாணவர்களுக்கு பாராட்டு

கோவை :பீளமேடு, கீதாஞ்சலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை குவித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அறிவியல் பிரிவு மாணவி நிசாந்தினியும், கலைப்பிரிவு மாணவி வைசிகாவும், 600க்கு 586 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.கலைப்பிரிவில் பயின்ற ஜெய் ஹரிணி என்ற மாணவி 582, கணிதப்பிரிவில் பயின்ற தக் ஷிதா என்ற மாணவி 578 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் ஏழு பேரும், கணிதம், வேதியல், வணிகவியல் பாடங்களில் ஒருவர் வீதமும், நுாறுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.தமிழ் பாடத்தில் இரண்டு பேர், ஆங்கிலம், பிரெஞ்சு, இயற்பியல், வணிக கணிதம், கணக்கியல் பாடத்தில் தலா ஒரு மாணவிகள் நுாற்றுக்கு, 99 மதிப்பெண் எடுத்துள்ளனர். உயிரியல் பாடத்தில் ஒரு மாணவியும், பொருளியில் பாடத்தில் நான்கு மாணவிகளும், நுாறுக்கு 96 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களையும், பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளையும், பள்ளியின் தாளாளர் அழகிரிசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !