உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உச்சம் தொட்டது கொப்பரை விலை

உச்சம் தொட்டது கொப்பரை விலை

ஆனைமலை,: ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில், அதிகபட்சமாக கிலோவுக்கு, 172 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 28 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 163.15 முதல், 172.09 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 74 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 126.99 முதல், 156 ரூபாய் வரை விலை கிடைத்தது.மொத்தம், 102 கொப்பரை மூட்டைகளை, 21 விவசாயிகள் கொண்டு வந்தனர்; ஆறு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த வாரம், 6.79 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 45.90 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஏலத்தில், கொப்பரைக்கு அதிக விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.அதிகாரிகள் கூறுகையில், இங்கு, 'இ-நாம்' திட்டத்தில் நடக்கும் கொப்பரை ஏலத்தில், விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்கின்றனர். கிலோவுக்கு அதிகபட்சமாக 172 ரூபாய் விலை கிடைத்துள்ளது. இதுவரை நடந்த ஏலத்தில், இதுவே அதிகபட்ச விலை, என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை