உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொரோனா சிகிச்சை கட்டணம்; இன்சூரன்ஸ் நிறுவனம் தர உத்தரவு

கொரோனா சிகிச்சை கட்டணம்; இன்சூரன்ஸ் நிறுவனம் தர உத்தரவு

கோவை; கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற கட்டணத்தை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.கோவை துடியலுார் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர், தனியார் கம்பெனியில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்தார். கம்பெனி சார்பில், இவருக்கு ஸ்டார் ெஹல்த் இன்சூரன்சில், மருத்துவ காப்பீடு செய்யப்பட்டது. கடந்த 2021ல் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் கனகராஜ் சிகிச்சை பெற்றார். மருத்துவ செலவு தொகை, 61,916 ரூபாய் வழங்க கோரி விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் வழங்க மறுத்தது.இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கனகராஜ் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரர் சிகிச்சை பெற்ற தொகையில், 51,916 ரூபாய் வழங்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ