கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்
புகையிலை பொருட்கள் விற்பனை
ரேஸ்கோர்ஸ்: போலீசார் ரோந்து சென்ற போது, தனலட்சுமி நகரில் புகையிலை பொருட்கள் விற்ற சித்தாபுதுார் ரவிக்குமார், பி.என்.பாளையத்தில் விற்பனை செய்த, செங்காடு பகுதியில் வசிக்கும் மதுரை பாண்டியன் ஆகியோரை கைது செய்து, 21 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மது குடித்த மூவர் மீது வழக்கு
கோவை: மாநகர போலீசார் பொது இடத்தில் மது குடித்தது குறித்து மூன்று வழக்குகள் பதிந்த போலீசார் ஐந்து பேரை, கைது செய்து பிணையில் விடுவித்தனர். குழந்தை திருமணம்; 5 பேர் மீது வழக்கு கோவை: கோவையில் 14 வயது பள்ளி மாணவிக்கு, பெற்றோரே உறவினர் ஒருவருடன் குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஆக., மாதம் திருமணம் நடந்த நிலையில், திருமணத்துக்கு பின்னர் சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். தனது ஆசிரியரிடம் தெரிவித்து அழுதுள்ளார். பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் கணவர், கணவரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் என ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கணவரை கைது செய்தனர்.