அடுக்குமாடி குடியிருப்பில் திருட்டு
சாய்பாபாகாலனி: பாரதி பார்க் மெயின் ரோட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சாரதா,86; வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். மர்ம நபர்கள் முன் கதவை உடைத்து, வீட்டிலிருந்து 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி தட்டு, குத்துவிளக்கு, டம்ளர் ஆகியவற்றை திருடி சென்றனர். சாய்பாபா காலனி போலீசார் விசாரிக்கின்றனர். புகையிலை விற்றவர்கள் கைது சரவணம்பட்டி: போலீசார், பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். சிவானந்தாபுரத்திலுள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கண்ணன்,27, என்பவரை கைது செய்தனர். அதே போல ஜின்னிங் பேக்டரி ரோட்டிலுள்ள பெட்டி கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருள் விற்ற முகேஷ்,21,என்பவர் கைது செய்யப்பட்டார். போதையில் விழுந்தவர் பலி பீளமேடு: ஒடிஷா மாநிலம், கஞ்சம் பகுதியை சேர்ந்தவர் துனா பெகீரா,40; பீளமேடு, விளாங்குறிச்சி ஜெயின் அபார்ட்மென்டில் கட்டுமான வேலை செய்து வந்தார். மது போதையில் இருந்ததால் தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.