மேலும் செய்திகள்
இருசக்கர வாகனம் திருட்டு
14-Jun-2026
காளப்பட்டி: பாலாஜி நகரை சேர்ந்தவர் சரண்யா, 36. ஸ்கூட்டியில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற போது பைக்கில் தொடர்ந்து வந்த நபர் சரண்யாவின் தங்க செயினை பறித்தார். சரண்யா செயினை இறுக பிடித்ததால் இரு துண்டுகளானது. ஒரு துண்டு செயினுடன் அந்நபர் தப்பினார். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ் மோதி முதியவர் பலி சுந்தராபுரம்: குறிச்சியை சேர்ந்த வீரமணி, 62 ஸ்கூட்டரில் சென்றார். சுந்தராபுரம், பொள்ளாச்சி மெயின் ரோடு பஸ் ஸ்டாப் அருகே பொள்ளாச்சி - கோவை நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ், ஸ்கூட்டரின் பின்னால் மோதியது. படுகாயமடைந்த வீரமணி, அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பஸ் டிரைவர் மணிகண்ட செல்வராஜ்,30 மீது வழக்கு பதிந்தனர். கஞ்சா விற்றவர் கைது செல்வபுரம்: செல்வபுரம் போலீசார், தெலுங்குபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் மரத்தடியில் நின்ற ஒடிஷாவை சேர்ந்த புருராம்ஷா, 33, என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவர் 1.295 கிலோ கஞ்சா வைத்திருந்தார். பச்சாபாளையத்தில் அறை எடுத்து தங்கி கஞ்சா விற்றது தெரிந்தது. புருராம்ஷா சிறையில் அடைக்கப்பட்டார்.மது விற்றவர் கைது சரவணம்பட்டி: சரவணம்பட்டி போலீசார், சத்தி ரோடு டாஸ்மாக் மதுக்கடை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பிளாக்கில் மது விற்றுக்கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பன்னீர் செல்வம்,57, என்பவரை கைது செய்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
14-Jun-2026