மேலும் செய்திகள்
யானைகள் முகாமில் சதுர்த்தி
14-Sep-2026
சிறுமுகை: கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் நேற்று செந்நாய் ஒன்று, 3 வயது ஆண் மான் ஒன்றை துரத்தி, வேட்டையாட முயன்றது. செந்நாய் கடியால் படுகாயமடைந்த மான், தப்பித்து சம்பரவள்ளிபுதூர் கிராமப் பகுதிக்குள் நுழைந்தது. காயமுற்ற மானைப் பார்த்த மக்கள், சிறுமுகை வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சிறுமுகை வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் அங்கு செல்வதற்குள் மான் உயிரிழந்துவிட்டது. மானின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்தனர்.
14-Sep-2026