உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை

 பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை

வால்பாறை: வால்பாறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 10ம் தேதி குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் உள்ளிட்ட சுகாதார நிலையங்களில், 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு வரும், 10ம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் கூறுகையில், ''வால்பாறை தாலுகாவில், 1 - 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 9,046 பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளிலும் சுகாதாரப்பணியாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை நேரில் வழங்குகின்றனர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை