மேலும் செய்திகள்
பொன்னான வாய்ப்பு தந்தது 'தினமலர்' kovai vizha | dinamalar
23-Nov-2024 | 1
கோவை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து, அரையிறுதிக்கு முன்னேறினர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும், 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. தற்போது, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும்.* காந்திபார்க், மாரண்ண கவுடர் மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 196 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஜி' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர் அக்சய், எட்டாம் வகுப்பு மாணவர் ஜிஸ்னு பிரணவ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் சுரேஷ்கனி பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் சாவித்திரி, அகல்யா, முத்துமாரி, சுவேதா, சத்யா ஆகியோர் உடனிருந்தனர். * கருமத்தம்பட்டி, பதுவம்பள்ளி, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 324 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவன் ஸ்ரீவிஷ்ணு, எட்டாம் வகுப்பு மாணவர் ஆதர்ஷ் ஆகியோர், முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் நிர்மலா, பரிசுகளை வழங்கினார். ஆசிரியர்கள் உமாமகேஸ்வரி, சரண்யாதேவி, ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
23-Nov-2024 | 1