உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசினர் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ சேர்க்கை துவக்கம்

 அரசினர் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ சேர்க்கை துவக்கம்

கோவை: கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 2026---27ம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ பாடப்பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன் மற்றும் கணினி பொறியியல், ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் உள்ளிட்ட 14 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த கல்வி கட்டணம் ஆண்டிற்கு ரூ.2,212 மட்டுமே. மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி மற்றும் அரசின் கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் https://tnpoly.inஎன்ற இணைய தளத்தின் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லுாரியில் நேரில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என, கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை