உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக பட்ஜெட்டில் பாரபட்சம்; சுற்றுலா பயணியர் அதிருப்தி

தமிழக பட்ஜெட்டில் பாரபட்சம்; சுற்றுலா பயணியர் அதிருப்தி

வால்பாறை,; தமிழக பட்ஜெட் அறிவிப்பால், வால்பாறையில் சுற்றுலாபயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா ஸ்தலங்களை தொடர்ந்து, வால்பாறைக்கு தான் அதிக அளவில், சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் மலைப்பகுதி சுற்றுலாஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு ஆகிய பகுதிகளில், 1,200 சதுர கி.மீ., பரப்பளவில், மலைப்பகுதிகளுக்கான முழுமையான திட்டங்கள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சுற்றுலாபயணியரின் நீண்ட நாள் கோரிக்கையான 'ரோப்வே' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்த, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது ஏமாற்றமளிக்கிறது. மலைப்பிரசேதமான வால்பாறையிலும், ஊட்டியை போன்று 'ரோப்வே' திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.கிடப்பில் உள்ள சுற்றுலா மேம்பாட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது, சுற்றுலாபயணியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ