கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் கலந்துரையாடல்
கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான விடார்ட் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சித் அஹமது கலந்து கொண்டு, மாணவர்கள் இடையே சிறப்புரையாற்றினார். தொழில்முனைவுத் திறனும், தலைமைத்துவச் சிந்தனைகளும் கொண்ட 'என்புளூன்ஸர்' தளத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவருமான இவர், தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். மாணவர்கள் 'லின்கட் இன்' மூலம் தொடர்புகளை விரிவுபடுத்தவும், ஒபன் சோர்ஸ் பங்களிப்பு, பயிற்சி திட்டங்களில் பங்கேற்றுதல், தனிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடவும் கேட்டுக்கொண்டார். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் முக்கிய திறன்களாக புதுமை சிந்தனை, தொடர்புத்திறன், தலைமைத்துவம், தொழில்நுட்ப நுணுக்கம் ஆகியவற்றை கல்லுாரியிலேயே வளர்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். நிறுவன தலைவர் பொங்கலுார் பழனிசாமி, துணை தலைவர் இந்து, தலைமை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லுாரி முதல்வர் ராமசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.