உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்ச்சிப்பணிகள் குறித்து  மாவட்ட கலெக்டர் ஆய்வு 

வளர்ச்சிப்பணிகள் குறித்து  மாவட்ட கலெக்டர் ஆய்வு 

ஆனைமலை: ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளை, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். ஆனைமலை அருகே, ஆழியாறு அணை பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு, குடிநீர் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, கம்பாலபட்டியில், 5.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், நிறைவடைந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  ஆனைமலை அருகே பழங்குடியின கிராம மக்கள் வசிக்கும், நாகரூத்,1 செட்டில்மென்ட் பகுதியில் உன்னி குச்சி அழித்தல் பணி, சேத்துமடை வனத்துறைக்கு சொந்தமான ஆனைமலையகம் வளாகத்தில் உள்ள ஐந்து தங்குமிடங்கள், டிரக்கிங் செல்வது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சப்–கலெக்டர் ராமகிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ