மாவட்ட சீனியர் அணி தேர்வு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.எஸ். ராஜன் டிராபிக்கான மாவட்ட சீனியர் மாணவர் அணி தேர்வு இன்று நடக்கிறது. காலை 7:00 மணிக்கு ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இத்தேர்வில் 1996 செப்டம்பர் 1ம் தேதி அல்லது அதன் பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம் என, சங்க செயலாளர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார்.