தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாட்டினை தெற்கு நகர இளைஞரணி நிர்வாகி முத்துக்குமார் செய்தார். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், 50 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள், அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவை வழங்கினார். கழக சட்ட திட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், நகராட்சி தலைவர் சியாமளா முன்னிலை வகித்தனர். நிர்வாகி தர்மராஜ், கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.