தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு நகர தி.மு.க. வார்டு இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர், பூத் அமைப்பாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. தெற்கு நகர செயலாளர் அமுதபாரதி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திருமலைராஜா, மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப்கான், வரும், 2026 சட்டசபை தேர்தலில், இளைஞர் அணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் மற்றும் மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். நகர துணை செயலாளர்கள் தர்மராஜ், நாச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.