உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிக்கு ரூ.84.75 லட்சம் நன்கொடை

அரசு பள்ளிக்கு ரூ.84.75 லட்சம் நன்கொடை

கோவை: கோவையிலுள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை மேம்படுத்த ரூ.84.75 லட்சத்தை கலெக்டர் பவன்குமாரிடம் ஆதித்யா கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுகுமாரன் நேற்று வழங்கினார். கோவை, சரவணம்பட்டியிலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக்கு ரூ.21.25 லட்சம் மதிப்பீட்டிலும், காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.21.25 லட்சம் மதிப்பீட்டிலும், காட்டம்பட்டி டி.எஸ்.ஏ. அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.42.25 லட்சம் மதிப்பீட்டிலும் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆய்வகங்கள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்த ஆதித்யா கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்/ தொழிலதிபர் சுகுமாரன் 84.75 லட்சத்துக்கான வரைவோலையை கலெக்டரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (பயிற்சி) பிரசாந்த் கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிறைமதி, முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ