உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோரம் குப்பை குவிப்பு திணறும் வாகன ஓட்டுநர்கள்

சாலையோரம் குப்பை குவிப்பு திணறும் வாகன ஓட்டுநர்கள்

பொள்ளாச்சி: தேசிய நெடுஞ்சாலையில், ஆச்சிப்பட்டி பகுதியில், மூட்டை மூட்டையாககொட்டப்படும் கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஆச்சிப்பட்டி அருகே சாலையில் தினமும், அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பல இடங்களில் சாலை ஓரங்களில் மூட்டைமூட்டையாக கழிவுகள் கொட்டப்படுகிறது.இரவு நேரங்களில், வாகனங்களில் கொண்டு வரப்படும், இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், சாலையோரம் உள்ள மைல் கற்களை மறைத்து கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டாமல் தடுப்பதிலும், அவற்றை அப்புறப்படுத்துவதிலுல் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை இடையே பனிப்போர் நீடிக்கிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:ஒருசில பகுதிகளில் குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பையை, சாலை ஓரங்களில் கொட்டுவதை பலர் வாடிக்கையாக்கி வருகின்றனர். சாலை ஓரங்கள் அனைத்தும் குப்பை குவிக்கும் இடமாக மாறி வருகிறது.தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டாமல் தடுக்க, துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களும், வீடுகள்தோறும் துாய்மை பணியாளர்கள் வாயிலாக குப்பை சேகரிக்க, முனைப்பு காட்ட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ