உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை இல்லா கோவை விழிப்புணர்வு மாரத்தான்

போதை இல்லா கோவை விழிப்புணர்வு மாரத்தான்

கோவை; கோவை நேரு கல்வி குழுமம் சார்பில், 'போதை இல்லா கோவை' விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடந்தது. கோவை நேரு ஸ்டேடியம் எதிரே துவங்கிய மாரத்தானை, மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, 3 கி.மீ., மாரத்தான், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 5 கி.மீ., மாரத்தான் நடந்தது. மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று, நேரு ஸ்டேடியத்தை ஒரு முறை சுற்றி வந்து நிறைவு செய்தனர். மூன்று போட்டிகள் ஐந்து பிரிவுகளாக நடந்தன. 3 கி.மீ., போட்டி, கேரளா கிளப் வழியாக ஆர்.டி.ஓ., அலுவலகம், அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியம் வந்தடைந்தது. 5 கி.மீ., மாரத்தான், கோவை நேரு ஸ்டேடியம் எதிரே துவக்கி கேரளா கிளப் வழியாக மகளிர் பாலிடெக்னிக் வரை சென்று, மீண்டும் அண்ணா சிலை வழியாக நேரு ஸ்டேடியம் அடைந்தது. ஒவ்வொரு பிரிவிலும் ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 ஆயிரம் மற்றும் மெடல், சான்றிதழ்கள் முதல் மூன்று பரிசுகளாக வழங்கப்பட்டன. நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார், நேரு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை