மேலும் செய்திகள்
முன்பருவ கல்வி சேர்க்கை ; விஜயதசமி அன்று அழைப்பு
29-Sep-2025
பொள்ளாச்சி; அங்கன்வாடி பணியாளர்களுக்கு, குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 1,780க்கும் மேற்பட்ட குழந்தைகள், தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 99 அங்கன்வாடி மைங்களில், 1,750க்கும் மேற்பட்ட குழந்தைகள், முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, அவ்வப்போது பல்வேறு நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, சின்னாம்பாளையம் வடக்கு ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்காணிக்கும் முறைகள் குறித்த பயிற்சி நடத்தப்பட்டது. அதாவது, தினமும், 30 பணியாளர்கள் வீதம், மூன்று நாட்களுக்கு 90 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று நடந்த பயிற்சி வகுப்பில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தசாலினி, ஆர்.பி.எஸ்.கே., டாக்டர் கார்த்திகா, எஸ்.எஸ்.ஏ., சிறப்பு பயிற்றுநர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர். குறிப்பாக, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகள் செலவில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் உயரம், உயரத்திற்கு ஏற்ப எடை, குறைந்த எடையுடன் இருக்கும் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை தாக்கும் ரத்தசோகை உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, அவற்றை குறைக்கும் வகையில் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விவரிக்கப்பட்டது.
29-Sep-2025