உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

தொண்டாமுத்தூர்; கோவை வனச்சரகத்திற்குட்பட்ட அட்டுக்கல் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம்,65, கூலித்தொழிலாளி. இவர் தனது உறவினர்களான முருகன், 54, ராஜா என்கிற சகாயம், 29, சதீஷ், 30 ஆகியோருடன், அட்டுக்கல் மலை உச்சியில் உள்ள பெருமாள்முடி கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றுமுன்தினம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக புதருக்குள் இருந்த ஒற்றைக் காட்டு யானை, அவர்களை துரத்தியது. இதில், முருகன், சகாயம், சதீஷ் ஆகிய மூவரும் ஒரே திசையில் ஓடி, அட்டுக்கல் கிராமத்தை அடைந்தனர். வெகுநேரமாகியும், மருதாச்சலம் வரவில்லை. இதனையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நள்ளிரவு நேரமானதால், வனத்திற்குள் சென்று தேட முடியாமல், நேற்று காலை, தேடினர். அப்போது, காட்டு யானை தாக்கி, உயிரிழந்த நிலையில், மருதாச்சலம் சடலமாக கிடப்பதை கண்டனர். இதனையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை