உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளத்தில் சிக்கி தவித்த யானை; 2 மணி நேரத்துக்கு பின் கரையேறியது

வெள்ளத்தில் சிக்கி தவித்த யானை; 2 மணி நேரத்துக்கு பின் கரையேறியது

வால்பாறை; வால்பாறை -- சாலக்குடி ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், இருமாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர். அதிரப்பள்ளி ரோட்டில் சமீப காலமாக யானைகள் அதிகளவில் நடமாடுகின்றன. இந்நிலையில், கேரளாவில் தற்போது பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், அங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெருங்கல்குத்து அணை திறக்கப்பட்டதால் சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, ஒற்றை யானை வெள்ளத்தில் சிக்கி வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் தவித்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெள்ளத்தில் சிக்கிய யானை பரிதவித்தது. தகவல் அறிந்த சாலக்குடி வனத்துறையினர், அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை நிறுத்தினர். அதற்குள்ளாக, வெள்ளத்தில் சிக்கிய யானை நீந்தியபடி வனப்பகுதிக்குள் சென்றது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் யானை வனத்திற்குள் சென்றதால் வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை