தடாகம் வட்டாரத்தில் யானைகள் நடமாட்டம்
பெ.நா.பாளையம்; தடாகம் வட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித் துள்ளது. கடந்த சில நாட்களாக தடாகம் வட்டாரத்தில் வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட கூட்டம் வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானைகளை கட்டுப்படுத்த, கோவை வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முழுமையாக கட்டுப் படுத்த இயலவில்லை. கூட்டம், கூட்டமாக வரும் யானைகள், வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பாப்பநாயக்கன்பாளையம், நஞ்சுண்டா புரம், வரப்பாளையம், மடத்துார் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.