UPDATED : செப் 10, 2026 09:28 PM | ADDED : செப் 10, 2026 09:23 PM
கோவை: தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு இ-மெயில் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் சரத் சுப்பிரமணியன் சங்கர் மீது, கோவை சைபர் கிரைம் போலீசில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகம், விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடந்த ஓராண்டாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தபோது, சரத் சுப்பிரமணியன் சங்கர் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, கோவையில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோவை சைபர் கிரைம் போலீசார் அவரை அழைத்து வந்து, 3 வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் அவர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். கோவை உள்ளிட்ட பிற இடங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.