காளியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
வால்பாறை, ; வால்பாறை, அண்ணா நகர் ஆற்றங்கரை காளியம்மன், முனீஸ்வரன், கருப்பசாமி, நாகம்மாள் திருக்கோவிலின், 43ம் ஆண்டு திருவிழா நேற்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.வரும், 25ம் தேதி முத்துமாரியம்மன் கோவிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு அபிேஷக பூஜைகள் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்து வரப்படுகிறது. 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.வரும், 27ம் தேதி காலை, 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.