வளையல் கடை வீதியில் தீ விபத்தால் பரபரப்பு
வால்பாறை: வால்பாறை நகரில் வளையல்கடை வீதி உள்ளது. இங்கு, நகராட்சிக்கு சொந்தமான கடைகள் நேற்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை கடையின் பின் பக்க மின் கம்பத்திலிருந்து திடீரென்று ஒயர் ஸ்பார்க் ஆனது. இதானல், கடைகளின் மேல் இருந்த சீட்டின் மீதுள்ள புதர் செடிகள் தீயில் கருகின. தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று தண்ணீர் பீச்சியடித்து கடைகளின் மேல் பகுதியில் பரவிய தீயை அணைத்தனர். இதனால், கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.