தீயணைப்பு படையினர் ஒத்திகை
மயிலேறிபாளையம்: மயிலேறிபாளையம் தடுப்பணையில், நீரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்தனர். வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகையில், கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில், 11 பேர் பங்கேற்றனர்.