கால்பந்து லீக் போட்டி 11 அணிகள் பங்கேற்பு
கோவை: கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், நேரு ஸ்டேடியத்தில், 'லீக்' சுற்று முறையில் போட்டிகள் நடக்கின்றன. இதில், மொத்தம் 11 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த போட்டியில், பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லுாரி மற்றும் ஒலம்பஸ், ஏ.பி.சி.கே.எம்., அணிகள் மோதின. இதில், 2:0 என்ற கோல் கணக்கில், பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லுாரி வெற்றி பெற்றது. கோவைப்புதுார் புட்பால் கிளப் உடனான போட்டியில், ஹீரோஸ் புட்பால் கிளப் அணி பங்கேற்கவில்லை. மொத்தம் 24 சுற்று போட்டிகள் முடிவடைந்தன. தொடர்ந்து 23 சுற்றுகளுக்கு பின், அதிக கோல் எடுத்த அணிகள், வெற்றி பெற்ற அணிகளாக அறிவிக்கப்படும்.